அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - வரலாறுதிருக்கோயில் வரலாறு :


சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப்பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப்பெற்றுள்ளது. என்பது பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.

புராண நூலின் படி இதன் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு . அசலம் என்றால் மாலை .ஸ்ரீநரசிம்ம பெருமாள் பிரகல்லாதன் முதலிய அடியவர்களுக்கு கடிகை மாத்திரைப்பொழுதில் இம்மலை மீது யோக சமாதியில் காட்சியளி;த்து முக்கியளித்ததால் கடிகாசலம் எனப்பெயர் பெற்றது. இங்குள்ள யோக நரசிம்ம மூர்த்தி பழமையான ஒன்றாகும். ஏனெனில் பேயாழ்வார் (முதலாழ்வார்களில் நடுவர்) இத்தலத்தை பாடியுள்ளதால் இவ்வூர் மலை மிகப்பழமையான வரலாறு பெற்றது எனலாம்.

அடுத்து சோழர்களி;ல் கரிகாற்சோழன் ஆட்சியில் தன் நாட்டை 48 கோட்டமாக பிரித்ததில் திருக்கடிதை நாடு என ஒன்று குறிப்பிட்டுள்ளது. கடிகா என்பது வித்தியாஸ்தானம் . காஞ்சி கடிகை என்ற பெயர் வருவதைக் காண்க.

இங்கு வேதம் முதலிய அரிய கலைகள் கற்பிக்கப்பட்ட காரணத்தினால் கடிகாசலம் எனப் புகழும் பெற்றது. சோளசிம்மபுரம் எனப் பெயர் பெற்றது. மலைத் திருக்கோயிலும் ஊரும் மிகப் பழமையானவை என்பதில் மலைத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டும் சான்றாக சான்றாக அமைகிறது. வுpஜய நகர வேந்தர் காலத்தில் கடிகைப் பகுதியில் எறும்பி என்ற ஊரே புகழ்பெற்றிருந்தது. அதன் கிழக்கே இன்றைய சோளிங்கர் நகரம் தோன்ற காரணமாக இருந்தவர் சுவாமி தொட்டாட்சியர் என்பவர்.

பெரிய மலையில் 14 ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் உள்ளது. சிறிய மலையில் 17 ம் நூற்றாண்டு கல்வெட்டுக்கள் உள்ளது

இதன் மூலம் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயர் ஸ்ரீராமர் அரங்கநாதர் சந்நிதிகளைத் தவிர வரதராஜர் வேங்டேசர் சந்நதிகளும் இருந்தன என்றும் ஊரில் குரசேகரரழ்வார் பெயரில் ஒரு மண்டபம் இருந்தன என்றும் அறிய முடிகிறது.


திருக்கோயிலின் புராண வரலாறு :


இந்திரத்யும்ன மஹாராஜா தனது மனைவியுடன் திருமலை திருப்பதிக்குச் சென்று திருமலை திருவேங்கடமுடையானைச் சேவித்து தங்களுக்கு பெரு வீடு (மோட்சம்) வேண்டுமென்று பிரார்த்திக்க அதற்கு அவர் சோளிங்கபுரம் என்கிற திருவடிகைக் குன்றின் பெரியமலை மீது வீற்றிருக்கும் அருள் மிகு யோக நரசிம்ம சுவாமியிடம் சென்று வணங்கி வழிபட்டு உன்னுடைய போற்றினை பெறுவாயாக என்று அருள் கூர்ந்தார்.

அதன்படி இந்திரத்யும்ன மகாராஜன் தன்னுடைய ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக சஸ்திர தியாகம்(ஆயுதங்கள்) செய்து நரசிம்மனை வழிபட்டார். அச்சமயம் திருக்கடிகை என்னும் படியான இது தன்டாகாருண்ய வனம் போல் காட்சியளித்தபடியால் ரிஷிகள் பகவானை வழிபட தவம் செய்து வருகிற சமயத்தில் நிகும்பன் என்னும் அரக்கனாலே துன்பப்பட்டு வந்தார்கள்.

இந்திரத்யும்ன ராஜா வந்தவுடன் அவரிடம் தங்களுடைய துயரத்தினை போக்க வேண்டும் என்று பிரார்த்திக்க அரசனும் தான் சஸ்திர தியாகம் செய்து விட்டபடியால் அரக்கருடன் போர் செய்ய இயலாது என்று கூற அதற்கு அவர்கள் மறுத்து உன்னுடைய ஷ்த்திரிய தர்மத்தை விட்டுவிட்டு வேறு தர்மத்தை எடுத்துக்கொள்வது பெரும் பயத்தை விளைவிக்கக் கூடியது.

ஆகவே நீ எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது உன்னுடைய தர்மமும் கடமையும் ஆகும் என்று தெரிவித்து விட்டார்கள் அன்று இரவு அரசனும் ரிஷிகளும் தனது சங்கல்பத்தை மாற்ற முடியாமலும் மிகவும் கலந்து நொந்தார்கள். எம்பெருமான் நேரில் சேவை கொடுத்து சங்கல்பத்தை ரிஷிகளுடைய பிரார்த்தனையும்

சிறிய மiலில் தியானம் செய்து வரும் சிறிய திருவடிக்கு (அருள்மிகு யோக ஆஞ்சநேய சுவாமி) கார்த்திகை வெள்ளிக்கிழமை அன்று இந்திரத்யும்ன மகாராஜாவுக்கு சகாயமாக நீ யுத்தம் செய்து நிகும்பன் என்ற அரக்கனை மாய்த்து வர வேண்டியது என பணிந்து தனது சுதர்ஸன ஆழ்வாரை (சுக்கரம்) கொடுத்து அனுக்கிரகித்து அனுப்பி வைத்தார். அவ்வண்ணமே சிறிய திருவருடியும் அரக்கனை கொன்று அரசனுக்கு உதவியதாக ரிஷிக்கூட்டங்கள் மங்களத்தை செய்து வைத்த நாள் ஞாயிற்றுக்கிழமை ஆகும்.

ஆகவே ஞாயிற்றுக்கிழமை அன்று அருள் மிகு யோக ஆஞ்சநேய சுவாமி சங்கு சக்கரங்களை பெற்று ஸ்ரீ வைஷ்ணவ பரிபூர்த்தியை அடைந்ததாக சரித்திரம் கூறுகிறது. அந்த சக்கரத்தை சிறிய மலையில் உள்ள புஷ்பகரணியில் (குளம்) திருமஞ்சனம் செய்து அதை பரிக்ரஹித்தார். அந்த குளத்திற்கு இன்றும் சக்கர தீர்த்தம் எனப்பெயர் வழங்கப்பட்டுவருகிறது.

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை சக்கர தீர்த்தத்தில் நீராடி படிக்கட்டுகளில் படுத்து விரதம் இருந்தால் அவர்களுக்க அருள்மிகு யோக ஆஞ்சநேயர் சொப்பணத்தில் காட்சி கொடுத்து விருப்பத்தை நிறைவேற்றுவதை இன்றும் காணலாம். கார்த்திகை மாதத்தில் ஒவ்வொறு ஆண்டும் வெள்ளி ஞாயிறு தினங்களில் பெரிய மலையில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அதே போல் சிறிய மலையிலும் ஞாயிறு அன்று அருள்மிகு யோக ஆஞ்சநேயருக்கும் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் மற்றும் பிரார்த்தனைகள் உற்சவங்கள் விஷேசமாக நடத்தப்படுகிறது.