பெரிய மலைக்கோயில்


அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் :


பெரியமலைக்கோவிலில் ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி வீற்றிருக்கிறார். யோகாசனம் ஸ்ரீசாளக்கிராமம மலை அணிந்துள்ளார். யோகபீடத்தில் தசாவதாரப் பட்டை விளங்குகிறது. இறைவன் திருவடிகளில் சூரிய சந்திரர்களின் நித்தியவாசம் சப்தரிஷிகளுக்கு கடிகைப் பொழுதில் நேரில் தோன்றிஅ ருள் புரிந்தார். சிறிய திருவடி என்னும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சங்குசக்கரம் அளித்தவர். பெருமாளுக்கு எதிர்புறத்தில் ஸ்ரீசேனை முதல்வர் நம்மாழ்வார் இராமானுஜம் உள்ளார். அடுத்து சப்தரிஷிகளும் கருடனும் உள்ளார்

கருவறையில் சிலா வடிவில் ஸ்ரீயோக நரசிங்கப்பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறையில் கீழே அமைந்த பலகையில் சிறிய விக்ரம் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமான் ஆதிசேடன் சக்கரத்தாழ்வார் கண்ணன் கருடாள்வார் முதலிய மூர்த்திகள் உள்ளனர்.

தாயார் சன்னதி :


பெரிய மலையின் இடைப்பகுதியில் தாயாருக்கு தனிக்கோயில் இருந்தது. பெருமாளுக்கு அருகில் தாயார் (மூலவர்) உற்சவர் அமிர்தவல்லி ஆகியோர் அமைந்துள்ளனர். தாயார் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறாh.