பெரிய மலைக்கோயில்


அருள்மிகு யோக நரசிம்மர் திருக்கோயில் :


பெரிய மலைக்கோயில் என்னும் யோக நரசிம்மர் சவாமி திருக்கோயில் கொண்ட பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. மலைகளுக்கு செல்லும் வழியில் பிரம்மதீர்த்தம் உள்ளது. கடிகாசலத்தில் 108 தீர்த்தங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுவருகிறது. அவற்றில் மிகமிக முக்கியமான ஒன்று பிரம்ம தீர்த்தம் என்னும் தக்கன் குளம். நீளம் 300 அடி அகலம் 200 அடி . 25 படிகள் . இக்குளத்தின் ஸ்ரீவரதராஜ சுவாமி கோயில் உள்ளது. இதில் பெருமாளுக்கு தெப்ப உற்சவம் தீhத்தவாரி போன்றவை நடைபெறுகின்றன.

மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. 1305 படிக்கட்டுகளைக் கொண்டு 750 அடி உயரத்தி;ல் உள்ளது. பெரியமலை அடிவாரத்திலிருந்து நுழைவு வாயில் ராஜகோபுரம் வரை 7 மண்டபங்கள் உள்ளன. இவை சேவார்த்திகள் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.

இராஜ கோபுரம் வடக்கு நோக்கி ஐந்து நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு விளங்குகிறது. வலப்புறமாக நுழைந்த அளவில் பெரிய பலிபீடமும் கொடிமரமும் காணலாம் உற்சவர் இருக்கும் ஊர்க் கேயிலில் தனியாக வேறு கொடிமரம் கிடையாது. பெருமாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் துவாத சாதாரண நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. முதலில் அம்ருதரவல்லி தாயார் சன்னதி உள்ளது. தாயார் சன்னதியைக் கடந்தால் பெருமான் சன்னதி.

தாயார் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார் . தாயாரை வலம் வந்து வடக்கு முகமாக நடத்தால் பெருமாளின் துவார பாலகர்களைக் காணலாம். அவர்களைத் தொழுது வலமாக வந்து தெற்கு வாசலில் நுழைந்தால் பெருமாளின் கருவறையின் முன் மண்டபம் காணலாம். பெருமாளின் பின்னமைந்த சுவரில் சாரளம் உண்டு . அங்கிருந்து பார்த்தால் எதிரே சிறிய மலை தெரியும் . சிறிய மலையில் யோக ஆங்சநேயரின் திருக்கண்கள் நேராகப் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மப் பெருமானின் திருவடி நோக்கி அமைந்துள்ளன என்று கூறுவர்.

பெரிய மலையில் பெருமாளுக்கு அழகிய சிறிய ஊஞ்சல் மண்டபம் உள்ளது. மூலவர் அருள்மிகு யோக நரசிம்ம சுவாமி கருவறைக்கு மேல் ஹேமகோடி விமானம் ஒரு கலசத்துடன் அமைந்துள்ளது. தாயார் கருவறைக்கு மேல் விமானம் ஒரு கலசத்துடன் அமைந்துள்ளது.