சின்னமலைக்கோயில்


அருள்மிகு யோக ஆஞ்சநேயர் திருக்கோயில்


இயற்கை எழில் கொஞ்சும் அழகிய குன்றின் மீது 406 படிகளைக் கொண்டு யோக ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. சிறிய மலை அடிவாரத்தில் ராஜகோபுரம் நுழைவு வாயில் வரை இரண்டு மண்டபங்கள் அமைந்துள்ளன. இராஜகோபுரம் 3 நிலைகளும் ஐந்து கலசங்களையும் கொண்டு வடக்கு நோக்கி அமைந்துள்ளது. வலமாக வந்தால் அனுமான் சன்னதியினைக் காணலாம் . எதிரே மேற்குத் திசையில் பெரியமலையில் நரசிங்க பெருமானின் கொடிக்கம்பம் இருப்பதை இங்கிருந்தே காணலாம் பெரிய மலையில் உள்ள நரசிங்கப் பொருமானின் திருவடியைக் கண்டவாறே அவரை நினைத்து தவமிருக்கும் நிலையைக் காணலாம்.அனுமத்தீர்த்தம்


அனுமார் சன்னதியை அடுத்து ஒரு பெரிய குளம் உள்ளது. இக்குளத்திற்கு ராமதீர்த்தம் அனுமத்தீர்த்தம் சக்கரத்தீர்த்தம் என்ற பல பெயர்கள் உண்டு . அருகே அரசமரம் ஒன்று பெரிதாக மேடை சூழக் காணப்படுகிறது.

அதன் கிழக்குப் பகுதியில் ஸ்ரீராமர் சன்னதி அமைந்த மண்டபம் காணலாம் . இராமர் சன்னதியை அடுத்து குல ஆராதனப் பெருமாளை அரங்கநாதர் இராமர் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகளின் கருவறைக்கு மேல் மூன்று விமானங்கள் கலசத்துடன் அமைந்துள்ளன.