ஊர்க்கோயில்


அருள்மிகு பக்திப் பெருமாள் திருக்கோயில்


சோளிங்கர் நகரின் நடுவில் நீள் சதுர வடிவில் அழகுற அமைந்துள்ளது. பெருமாள் திருக்கோயில் 300 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டு ஏறத்தாழ 2.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

இது ஐந்து நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. உயரம் 90 அடி பெருமான் கோயிலின் முன் இரண்டு நாற்கால் மண்டபங்கள் உண்டு . இப்போது தரையுடன் சமமாக நிற்கும் மண்டபங்கள் அறுபது வருடங்களுக்கு முன்பு படியுடன் இருந்தன. கோயிலின் உள்ளே ஒரு பிரகாரம்தான் உண்டு.ஆதிகேசவப் பெருமாள்


பெருமாள் சன்னதிக்குப் பின் ஆதிகேசவப் பெருமாள் சந்நதி உள்ளது. ஆதிகேசவன் உபயநாச்சிமாருடன் சிலை வடிவில் நின்ற நிலையில் உயர்ந்து காணப்படுகின்றனர். கருவறை முன்பு நின்ற நிலையில் உயர்ந்து காணப்படுகின்றனர். கருவறை முன்பு நின்ற நிலையில் துவாரக பாலகர் உண்டு

ஆதிகேசவப் பெருமாள் விழாக்காலத்தில் வெள்ளிக் கவசங்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் கருவறையைச் சுற்றி வலம் வரும் போது ஆண்டாள் சந்நதியைக் காணலாம்.