அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - தலப்பெருமை


பெரியமலைக் கோயில்


கடிகாசலத்தில் பதினென் குமுதன் மையான சிகரங்கள் உள்ளன. கிரேதாயுகத்தில் பொன் மலையாகவும் திரோதயுகத்தில் வெள்ளி மலையாகவும் துவாரயுகத்தில் தாமிர மலையாகவும் கலியுகத்தில் கல் மலையாகவும் விளங்கும் பெருமையுடையது.

ஆதில் ஸ்ரீமன் நாராயணன் வீற்றுள்ளார். ஹிரண்ய சிட்சகன் பிரகலாதரட்சகனாக அவன் அச்சம் கரும் உருவம் நீங்கி நரம் கலந்த சிங்க வடிவுடன் யோக நரசிம்மனாய் பக்தர்களுக்கு அருள் செய்கிறார் .யோக நரசிம்மருடன் பெருமான்களும் கண்ணன் மற்றும் சுதர்சன ஆழ்வார் முதலிய உற்சவ மூர்த்திகளும் உள்ளனர். யோகநரசிம்ம பெருமான் வினைகளை தகர்த்தெறிய கூடிய திருக்கோலத்துடன் வீற்றிருக்கிறார்.

நல்வழி காட்டுவதற்காக நாற்கரங்களில் சங்கு சக்கரம் சங்கடங்களை போக்கிட கழுத்தில் சாளக்கிராம மாலை யோகாசனம் புரியும் யோகபீடத் திருக்காட்சி சிங்கமுகம் கோரைபற்கள் கூரிய நீண்ட நகங்கள் பிடரிமயிர் செவ்வடி ஒற்றிய திருக்கண்கள் இவ்வாறாக சாந்த சொரூபமாக காட்சி அருளி சேவை சாதிக்கிறார்.

திருமங்கையாள்வார் பேயாழ்வார் நம்மாள்வார் மூவரும் மங்களாச்சாசனம் செய்த திருத்தலமாகும் . பேயாழ்வார் இவ்வெம்பெருமானை இளங்குமரன் என்று போற்றிப் புகழ்கிறார். நரம் கலந்த சி;ங்கமாய்த் தோன்றிய திருமாலை நம்மாழ்வார் அக்காரக்கனியே! ஏன்று கூறி பரவசம் அடைந்தார். திருமங்கையாழ்வரும் அக்காரக்கனி என்று அமுதத் திருவாய் மொழியால் அழைத்தார்.

சின்னமலைக் கோயில் :


ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் சிறிய மலை என்று அழைக்கப்படும் கடிககாசலமாகும். சிறியமாலை அஞ்சனையின் மைந்தன் ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் கொண்டுள்ளார். இம்மலை 350 அடி உயரமும் 406 படிக்கட்டுகளும் கொண்ட மலைக்கோயிலகும்.

யோக ஆஞ்சநேயர் :


யோக ஆஞ்சநேயர் சங்கு சக்கரகங்களுடன் காட்சி அருளுகிறார். யோக நிலையில் ஸ்ரீ யோக ஆஞ்சநேயரைக் காண கண்கோடி வேண்டும். இந்த சிலாவிக்கிரம் போல் பரத கண்டத்தில் வேறு எங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பு.

பிரம்ம தீர்த்தம் :


பிரம்ம தீர்த்தம் என்கிற தக்கான் குளம் இத்திருக்கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் பெரும்பாலும் பிரம்ம தீர்த்தம் என்கின்ற தக்கான் குளத்தில் புனித நீராடி இரு மலைகளுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இப்புனித தீர்த்தம் காசியிலுள்ள கங்கை கரை தீர்த்தத்தை வி;ட மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த தீர்த்தத்தில் மாசி மாதம் வரும் வியாழக்கிழமை தினம் நீராடுதல் மிகவும் தனிச்சிறப்பாகும்.

தலவிருட்சம :


சேம்மலையில் தல விரட்சம் என ஏதுமில்லை. ஊரில் பெருமாள் கோயிலில் பாரிஜாதம் ஒன்று முன்பு இருந்தது. சிறியமலையின் அசோக மரம் உள்ளத. அதன் கீழே குளம் அமைந்துள்ளது.

ஊர்க்கோயில் :


சோளிங்கன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பக்தோசித பெருமான்(உற்சவர்) சந்நதியின் பின் புறம் அமைந்துள்ள அருள் மிகு ஆதிகேசவன் பெருமாள் மிகவும் கீர்த்தி பெற்ற பெருமானாகும். இச்;சந்நதியில் மழை வேண்டி கேசவ பெருமாளுக்கு 1008 குடங்களுடன் விஷேச அபிஷேகம் செய்தால் மழை பொழியும் என்பது இன்று வரை கண்கூட நடந்து வருகிறது.

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் சந்நிதி :


இச்சந்நிதியின் உள்ளே கோமுகம் வெளியேறுவதற்கு கோமுகம் எதுவும் அமைக்கப்படவில்லை .இருப்பினும் கேசவப்பெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் முழுவதும் எம்பெருமான் காலடியில் மாயமாக மறைந்து விடுகிறது. இது இன்றுவரை நடக்கும் பேரதிசயமாகும். ஐவணவ மத ஆசாரியப் பெருந்தொகையோரில் நாத முனிகள் ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகள் சுவாமி இராமானுஜம் முதலியோர் இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டுள்ளனர்.