அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் - போக்குரவத்துக்கள்


வழித்தடங்கள் :


திருவடிக்கடிகை எனும் சோளிங்கபுரம் ஒரு வைணவத் திருத்தலமாகும் . இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள திவ்ய தேசங்கள் 108ல் ஒன்றானது. இத்தலம் வேலூர் மாவட்;டத்தில் அமைந்துள்ளது. இது தற்போது சோளிங்கபுரம் மற்றும் சோளிங்கர் என்று அழைக்கப்படுகிறது.

வான் ரயில் மற்றும் பேருந்து வசதிகள் :


அருள்மிகு லட்சுமி நரசிங்க சுவாமி திருக்கோயில் சோளிங்கபுரம் . இத்தலம் சென்னை பெங்களுர் இரயில் மார்க்கத்தில் அரக்கோணத்திலிருந்து மேற்கே 27 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை – திருப்பதி இரயில் மார்க்கத்தில் திருத்தணி இரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ மேற்கிலும் உள்ளது. மேலும் இப்புனிதமான பிரார்த்தனை தலத்திற்து வேலூர் சித்தூர் பெங்களுர் திருத்தணி அரக்கோணம் ஆற்காடு போன்ற வழித்;தடங்களில் பேருந்து வசதி உள்ளது.

இத்தலத்திற்கு வான் வழியாக வர விருப்பம் உள்ளவர்கள் சென்னை விமான நிலையத்தில் இறங்கி சென்னை மத்திய இரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் இரயில் நிலையத்தில் இறங்கி பேருந்து மூலமாக சோளிங்கர் அல்லது விமான நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்து மூலமாக திருத்தணி வழியாக சோளிங்கர் வந்து சேரலாம்.திருக்கோயில் அருகிலுள்ள நகரம் மற்றும் அவற்றின் தூரம் :


இத்திருக்கோயிலுக்கு அருகிலுள்ள முக்கிய நகரங்கள் சென்னை வேலூர் திருத்தணி அரக்கோணம் மற்றும் ஆற்காடு முதலியன ஆகும்.1 சென்னை 110 கி.மீ
2 வேலூர் 50 கி.மீ
3 திருத்தணி 27 கி.மீ
4 அரக்கோணம் 27 கி.மீ
5 ஆற்காடு 31 கி.மீ